ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல் அப்டேட் வெளியானது!
30 கார்த்திகை 2023 வியாழன் 15:21 | பார்வைகள் : 7506
சினிமாவில் கடந்த நாற்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். குணச்சித்திர கதாபாத்திரம்,வில்லன் என படிப்படியாக முன்னேறி அதன் பிறகு ஹீரோவாக அறிமுகமாகி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை அடைந்திருக்கும் ரஜினிகாந்த், 70 வயதை கடந்தாலும் இன்றளவும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகின்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி இனி படங்களில் நடிக்க மாட்டார் என வதந்திகள் பரவியது.ஆனால் அதற்கெல்லாம் "ஜெயிலர்" படத்தின் வெற்றியின் மூலம் தரமான பதிலடி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
"ஜெயிலர்" கொடுத்த வெற்றி ரஜினிக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது.அதன் காரணமாக ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார்.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் "தலைவர் 170" படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் "தலைவர் 171" படத்திலும் நடிக்கவுள்ளார்.இதற்கு இடையில் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் உருவாகும் "லால் சலாம்" என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்தாண்டு ரஜினியின் நடிப்பில் மூன்று படங்கள் அடுத்தடுத்த வெளியாகவுள்ளது.ஜனவரி மாதம் "லால் சலாம்" திரைப்படமும்,மே மாதம் "தலைவர் 170" திரைப்படமும்,தீபாவளி பண்டிகையை முன்னிட்டு "தலைவர் 171" படமும் வெளியாக இருப்பதாக தெரிகின்றது.எனவே இது ரஜினி இரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையடுத்து இன்னும் சில நாட்களில் ரஜினியின் பிறந்தநாள் வருகின்றமையினால் வழக்கம் போல ரஜினி இரசிகர்கள் தலைவரின் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.அவர்களின் கொண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் புதிய அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
அதாவது,ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "லால் சலாம்" திரைப்படத்தின் ட்ரைலர் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாகவும்,அத்தோடு "தலைவர் 170" படத்தின் தலைப்பு பிறந்நாளுக்கு முன்னர் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரட்டிப்பு விருந்து ரஜினி இரசிகர்களை உற்சாகமாக்கியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan