இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 8 கிலோ தங்கம் கைப்பற்றல்

30 கார்த்திகை 2023 வியாழன் 10:47 | பார்வைகள் : 6183
இலங்கையில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள இராமேஸ்வரத்துக்கு படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட எட்டு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை தென்னிந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, இந்திய கடலோர காவல்படையினர் சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது தங்கம் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்தனர்.
கடலோர காவல்படையினர் படகை நிறுத்த உத்தரவிட்ட போதும், அந்த உத்தரவை மீறி சந்தேகநபர்கள் தப்பியோடிவிட்டனர்.
அதன்போது, கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதால் சந்தேக நபர்கள் படகை விட்டுவிட்டு தப்பியோடினர்.
இந்நிலையில், கைவிடப்பட்ட படகில் உரிய தங்க கையிருப்பு இருந்ததை கண்டுபிடிக்க முடிந்தது.
கைப்பற்றப்பட்ட தங்கம் நீதிமன்ற நடவடிக்கைக்காக தென்னிந்திய சுங்க அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தென்னிந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.