Paristamil Navigation Paristamil advert login

உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல்! - வழக்கு பதிவு!!

உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல்! - வழக்கு பதிவு!!

30 கார்த்திகை 2023 வியாழன் 09:37 | பார்வைகள் : 11900


உள்துறை அமைச்சர் Gérald Darmanin இற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக அறிய முடிகிறது.

உள்துறை அமைச்சகத்தின் மின்னஞ்சலுக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் உங்களை எச்சரிக்க விரும்புகிறோம். நீங்கள் கொல்லப்படுவீர்கள். உங்களை சுற்றி காவல்துறையினர் இருந்தாலும் உங்களை நோக்கி பாயும் துப்பாக்கி குண்டை தடுக்க முடியாது!" என எழுதப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இந்த மிரட்டல் தொடரில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த கொலை மிரட்டல் தீவிர வலதுசாரியிடம் இருந்து வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்