Paristamil Navigation Paristamil advert login

வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்

வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விளக்கம்

30 கார்த்திகை 2023 வியாழன் 06:59 | பார்வைகள் : 7225


தற்போது சீனாவில் சுவாச நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் வைரஸ் தொற்று தயார்நிலை தடுப்புப் பிரிவின் தற்காலிக பணிப்பாளர் டொக்டர் மரியா வேன் கெர்கோவே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடி நிலையின் போது ஏற்பட்டதைப் போன்று மோசமானதல்ல என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

மேலும் புதிய வழக்கத்துக்கு மாறான வைரஸ்கள் கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களில் பெரும்பாலானோர் சளிக்காய்ச்சலால் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சீனாவின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.  

வர்த்தக‌ விளம்பரங்கள்