Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டிகளின் போது மூடப்படும் மெற்றோ நிலையங்கள்!!

ஒலிம்பிக் போட்டிகளின் போது மூடப்படும் மெற்றோ நிலையங்கள்!!

29 கார்த்திகை 2023 புதன் 17:32 | பார்வைகள் : 12264


ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் போது பரிசில் பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nunez, இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார். பல்வேறு மெற்றோ நிலையங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மூடப்பட உள்ள நிலையங்கள் குறித்த விபரங்களை விரைவில் RATP வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் வரையும் பயணச்சிட்டைகள் இரண்டுமடங்கு அதிக விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்