Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பம் தொடர்பில் புதிய விதிகள்

அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பம் தொடர்பில் புதிய விதிகள்

29 கார்த்திகை 2023 புதன் 10:25 | பார்வைகள் : 1572


அமெரிக்காவில் மாணவர் விசா தொடர்பில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விசா விண்ணப்ப நடைமுறையில் செய்யப்பட்ட திருத்தங்கள் நவம்பர் 27 ஆம் திகதி திங்கள்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளன.

F, M மற்றும் J விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாற்றங்களைக் கவனிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

விசா விண்ணப்பங்களில் முறைகேடுகள் மற்றும் சந்திப்பு முறைகளை (appointment system) தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விசாக்கள் கல்வி, தொழிற்கல்வி மற்றும் exchange மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன.

விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்கள் சுயவிவரத்தை உருவாக்கும் போது மற்றும் அவர்களின் விசா சந்திப்பை (visa appointment) திட்டமிடும் போது அவர்களது சொந்த பாஸ்போர்ட் தகவலைப் பயன்படுத்த வேண்டும். 

தவறான பாஸ்போர்ட் எண்ணைக் கொடுத்தால், விசா விண்ணப்ப மையங்களில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், தவறான தகவல் அளித்தவர்களின் சந்திப்பு ரத்து செய்யப்படும் என்றும், விசா கட்டணம் திரும்ப அளிக்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளது.

தவறான பாஸ்போர்ட் எண்ணுடன் சுயவிவரத்தை உருவாக்கியவர்கள் சரியான எண்ணுடன் புதிய சுயவிவரத்தை உருவாக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பழைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, புதிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பழைய பாஸ்போர்ட் தொடர்பான புகைப்பட நகல் அல்லது பிற ஆவணங்களை வழங்க வேண்டும்.

F மற்றும் M விசாக்களுக்கான விண்ணப்பதாரர்கள் Student and Exchange Visitor Program (SEVP) அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது திட்டத்தில் சேர வேண்டும். 

J விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பின் ஸ்பான்சர்ஷிப் தேவைப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்