கொக்குதொடுவாய் மனித புதைகுழியை அண்மித்துள்ள வீதியில் மனித எச்சங்கள்?

29 கார்த்திகை 2023 புதன் 03:33 | பார்வைகள் : 5615
முல்லைத்தீவு - கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அதனை அண்மித்துள்ள வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதாகவும், நீதிமன்றில் அது குறித்து இன்றைய தினம் தீர்வு எட்டப்படும் எனவும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் எட்டாவது நாள் அகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் 39 மனித எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கடந்த தினங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேற்காக உள்ள வீதிக்குள் மனித எச்சங்கள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025