எமது பலம் - இறையாண்மை எம் கடல்களில் இருந்தே - மக்ரோன்!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 19:06 | பார்வைகள் : 14514
பரிசில் கடற்படையினரின் அருங்காட்சியகத்தினை ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் திறந்து வைத்துள்ளார்.
பரிசில் ஈபிள் கோபுரத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்திருக்கும் pயடயளை னந ஊhயடைடழவ வில் இந்த கடற்படையின் அருங்காட்சியகத்தையே எமானுவல் மக்ரோன் மீள்திறப்பு செய்துள்ளார்.
ஆறு வருடங்களாகப் புணரமைப்பிற்காக மூடப்பட்டிருந்த இந்த அருங்காட்சியகம் தற்போது புதிய பரிமாணத்தில் மக்களிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
«எங்களது வழி, எங்களது தன்னாட்சி, எங்களது இறையாண்மை, எங்களது பலம், எங்களது பொருளாதாரம் கடலின் வழியே அமைந்தது»
«உலகின் இரண்டாவது அதிக கடற்பரப்பைக் கொண்ட நாடு பிரான்ஸ் ஆகும்»
என எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரான்சின் தீவுகள் உள்ளடக்கம் பிரான்சின் கட்டுப்பாட்டில் 10.2 மில்லியன் சதுரக் கிலோமீற்றர்கள் உள்ளன. இதன் வளங்கள் அனைத்தும் பிரான்சிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025