யோகா என்ற பெயரில் பாலியல் வன்முறை - பாய்ந்த காவற்துறை!!
28 கார்த்திகை 2023 செவ்வாய் 18:08 | பார்வைகள் : 16261
யோகா என்ற பெயரில் பாலியல் வன்முறை - பாய்ந்த காவற்துறை!!இன்று, வன்முறைகளிற்கு எதிரான மத்திய தலைமையகமான OCRVP (Office central pour la répression des violences aux personnes) இன் கீழ் 175 இற்கும் அதிகமான காவற்துறையினர் பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதில் சர்வதேசக் குற்றவாளியான, 71 வயதுடைய ருமேனியரான கிறெகொரியன் பிவோலாறு (Gregorian Bivolaru) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்டர்போலினாலும் பிரான்சினாலும் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார். இவரது வலையமைப்பும் பிரான்சில் முடக்கப்பட்டுள்ளது.
சிறுவயதினர் மீதான பாலியல் வன்முறை, பெண்களைக் கடத்திப் பாலியல் வன்முறை, பெரும் குழுஅமைப்பை வைத்து பெண்களைக் கடத்துதல், போன்ற பல வன்முறைக் குற்றங்கள் இவர் மீது பல நாடுகளில் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்துள்ளார்.

யோகா, மற்றும் தாந்ரீக யோகம் என்ற பெயரில் பெண்களை மயக்கி, அவர்களைப் பாலியல் தேவைகளிற்காக தொழில் முறையில் ஈடுபடுத்தியும் உள்ளார். ருமேனியாவிற்கு வெளியே 30 நாடுகளில் இவரது குற்றக்குழு இயங்கி வருகின்றது.
இதில் பிரான்சும் அடக்கம். பிரான்சில் பரிஸ், நீஸ் மற்றும் பல நகரங்களில் இவரது குற்றச் செயல் நடைபெற்றுள்ளது.

இன்று இவர் இவ்ரி-சூர்-சென் இல் வைத்து காவற்துறையினரின் பெரும் படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan