Paristamil Navigation Paristamil advert login

Colissimo : முன்னர் எப்போதும் இல்லாத அளவு - பொதிகள் விநியோகம் அதிகரிப்பு!!

Colissimo : முன்னர் எப்போதும் இல்லாத அளவு - பொதிகள் விநியோகம் அதிகரிப்பு!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 15:38 | பார்வைகள் : 15596


இந்த நவம்பர் மற்றும் வரும் டிசம்பர் மாதங்களில் பிரான்சில் முன்னர் எப்போதும் இல்லாத அளவு பொதிகள் விநியோகம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நவம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக இரண்டு மில்லியன் பொதிகள் விநியோகிக்கப்படுகின்றன. வரும் டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3.2 மில்லியனாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தமாக 106 மில்லியனுக்கும் மேற்பட்ட பொதிகள் Colissimo சேவை வழியாக அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் காலத்தினை முன்னிட்டு பலர் அன்பளிப்பு பொருட்கள் அனுப்பி வருவதால் இந்த அதிகூடிய பொதி விநியோகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 6% சதவீதத்தால் பொதி விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்