ஸ்ருதிஹாசனுடன் இணைந்த துருவ் விக்ரம்..
28 கார்த்திகை 2023 செவ்வாய் 14:20 | பார்வைகள் : 11217
பிரபல மாஸ் நடிகருக்காக நடிகர் துருவ் விக்ரம், ஸ்ருதிஹாசனுடன் இணைந்து ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த முதல் திரைப்படமான ’ஆதித்யவர்மா’ நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் அதேபோல் விக்ரமுடன் இணைந்து அவர் நடித்த ’மகான்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.
அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகயிருக்கும் கபடி வீரர் குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இதற்காக அவர் தற்போது கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில பாடல்களை பாடி ஆல்பங்களை வெளியிட்டுள்ள துருவ் விக்ரம், தற்போது பிரபல தெலுங்கு மாஸ் நடிகர் நானி நடிக்கும் படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை அவர் உலகநாயகன் கமல்ஹாசன் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நானி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்திற்கு நானிக்காக துருவ் பாடியுள்ளது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. விரைவில் இந்த பாடல் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan