Paristamil Navigation Paristamil advert login

விடுவிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக்கைதிகள் நலம் - இராணுவ அமைச்சர்!!

விடுவிக்கப்பட்ட பிரெஞ்சுப் பணயக்கைதிகள் நலம் - இராணுவ அமைச்சர்!!

28 கார்த்திகை 2023 செவ்வாய் 12:47 | பார்வைகள் : 19010


12 வயதுடைய ஐத்தான் யாஹாலோமி, 12 வயதுடைய எரஸ் கலேத்ரோன் மற்றும் அவருடைய சகோதரியான 16 வயதுடைய சாரா ஆகிய பிரெஞ்சுக் குடிமக்கள் ஹமாசினால் கடத்திச் செல்லப்பட்டு 50 நாட்களின் பின்னர் பெரு முயற்சியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை உடனடியாக பரிசோதிக்க்பபட்டுள்ளது. இவர்கள் பல நாட்கள் போசாக்கு இன்றி இருந்துள்ளார்கள். இதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரான இவர்களின் நிலைமை சீராக உள்ளமையை பிரான்சின் இராணுவ அமைச்சர் பெபஸ்தியோன் லுகொர்னு ( Sébastien Lecornu) தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்