'தளபதி 68' படத்தில் இணையும் 'லவ் டுடே' நாயகி..?
 
                    28 கார்த்திகை 2023 செவ்வாய் 11:41 | பார்வைகள் : 6931
தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா, லைலா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகிய மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய ’லவ் டுடே’ படத்தின் நாயகியும் இந்த படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக இஸ்தான்புல் பகுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் மோகன், பிரபுதேவா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ’லவ் டுடே’ நாயகி இவானா இந்த படத்தில் விரைவில் இணைய உள்ளதாகவும் அவர் விஜய்யின் தங்கை கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan