யாழில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு
28 கார்த்திகை 2023 செவ்வாய் 11:21 | பார்வைகள் : 13112
வடமராட்சி தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த இளம் தாய் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை யாழ் போதனா வைத்திய சாலையில் இடம் பெற்றுள்ளது.
கடந்த வருடம் திருமணம் செய்த குறித்த பெண் பிரசவத்திற்காக யாழ் போதனா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன் குறித்த பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தை பிறந்ததாக தெரிக்கப்படுகின்றது. நல்ல உடல் நலத்துடன் தாயும் இரு குழந்தைகளும் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தாய் தீடிரென உயிரிழந்தமை அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாகமேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது.
சம்பவத்தில் தொண்டைமானாறு வல்வை வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய நி.விதுஷா என்ற இளம் தாயே உயிரிழந்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan