கங்குவா படத்தில் ராணா?
 
                    28 கார்த்திகை 2023 செவ்வாய் 10:45 | பார்வைகள் : 11183
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கங்குவா'. திஷா பதானி, பாபி தியோல், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு இதுவரை பல கட்டமாக தாய்லாந்து, சென்னை, கோவா, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. இந்த நிலையில் இப்படத்தில் முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா டகுபதி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் தான் இவருக்கு பதிலாகப் ஹிந்தி நடிகர் பாபி தியோலை நடிக்க வைத்து அவருக்கு ஏற்ற சம்பளத்தை அளித்து மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan