இயக்குனர் விஜய் மீது தாக்குதல் முயற்சி காரணம் என்ன ?
27 மார்கழி 2023 புதன் 15:36 | பார்வைகள் : 7815
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஎல் விஜய்யை நடுரோட்டில் பவுன்சர் ஒருவர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் விஜய் தனது வீட்டில் வசித்து வரும் நிலையில் அவர் தனது படத்தின் பணிகளை கவனிக்க உதவியாளர் மற்றும் டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை பைக்கில் வந்த ஒருவர் உரசிய நிலையில் விஜய் அவரை சத்தம் போட்டார். இதனை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டை முற்றியது. அப்போது பைக்கில் வந்த நபர் திடீரென தனது ஹெல்மட்டை வைத்து விஜய்யை தாக்க முயன்றார். ஆனால் விஜய் விலகிக் கொள்ள, அருகில் இருந்த உதவியாளர் மணிசர்மா தலையில் ஹெல்மெட் தாக்கப்பட்டதால் அவருக்கு ரத்தம் கொட்டியது.
இதனை அடுத்து தாக்குதல் நடத்திய அந்த நபர் சென்று விட்டார். இந்த நிலையில் காயம் அடைந்த மணி சர்மாவை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஐசக் என்பதும் அவர் பவுன்சராக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளனர்
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan