Paristamil Navigation Paristamil advert login

இளம்பெண்ணுடன் நியூயார்க்கில் விஷால்.. முகத்தை மூடி ஓடியதால் பரபரப்பு..!

இளம்பெண்ணுடன் நியூயார்க்கில் விஷால்.. முகத்தை மூடி ஓடியதால் பரபரப்பு..!

27 மார்கழி 2023 புதன் 06:37 | பார்வைகள் : 6840


நடிகர் விஷால் நியூயார்க் சாலையில் இளம் பெண் ஒருவருடன் சென்று கொண்டிருக்கும் போது அவரை ஒருவர் வீடியோ எடுத்ததால் உடனே அவர் முகத்தை மூடிக் கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் விஷால் என்பதும் அவரது நடிப்பில் உருவான ’மார்க் ஆண்டனி’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’ரத்னம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக விஷால் நியூயார்க் சென்றதாக கூறப்பட்ட நிலையில் அங்கு அவர் இளம் பெண் ஒருவரின் தோளில் கை போட்டுக்கொண்டு நடந்து செல்கிறார். அவரை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்த போது அதை பார்த்ததும் விஷால் பதறியடித்துக் கொண்டு அந்த பெண்ணுடன் ஓடும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

ஷாலுடன் இருந்த அந்த பெண் யார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவரது காதலியா? அல்லது விஷாலின் அடுத்த படத்திற்கான வித்தியாசமான புரமோஷனா? என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்