Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் காசா போர் - கனடாவில்  எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை

இஸ்ரேல் காசா போர் - கனடாவில்  எதிர்த்து போராடியவர்களுக்கு நேர்ந்த நிலை

27 மார்கழி 2023 புதன் 04:56 | பார்வைகள் : 6277


கனடாவின் ஒட்டாவா நகரில் காசா போருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவா நகர நிர்வாகத்தினால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பங்கேற்றனர் எனவும் சிலர் கிறிஸ்மஸ் தாத்தா போன்று ஆடையணிந்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய படையினருக்கு கனடா ஆயுதங்களை விற்பனை செய்யக் கூடாது என போராட்டக்காராகள் கோரியிருந்தனர்.

மேலும் நிரந்தர போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தனர்.


இந்தப் போராட்டத்தின் ஒலி மாசடையும் வகையில் போராட்டக்காரர்கள் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்த மூன்று பேருக்கு சுமார் 500 டொலர்கள் தலா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்