Limoges : கத்திக்குத்து தாக்குதல் - சிறுவன் பலி - ஐவர் கைது!!

26 மார்கழி 2023 செவ்வாய் 18:19 | பார்வைகள் : 8611
16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை நண்பகலுக்குப் பின்னர் இச்சம்பவம் Limoges (Haute-Vienne) நகரில் இடம்பெற்றுள்ளது. துருக்கியே நாட்டைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் rue de l'Amphitheater வீதியில் வைத்து கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட குழு ஒன்றினால் குறித்த சிறுவன் இரு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சில மீற்ற தூரம் நடந்து சென்ற சிறுவன், வீதியில் விழுந்து பலியாகிய்யுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர், முதற்கட்டமாக பதின்மவயதுடைய 6 பேரினைக் கைது செய்துள்ளனர்.