Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்துமஸ் கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்! 

கிறிஸ்துமஸ் கொண்டாடிய பாகிஸ்தான் வீரர்கள்! 

26 மார்கழி 2023 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 5848


அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இதற்காக தீவிரமான பயிற்சிகளில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டிருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

அத்துடன் அவுஸ்திரேலியா வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளையும் வழங்கினர்.

அப்போது, பாபர் அசாமை அவுஸ்திரேலியா வீரர் உஸ்மான் கவஜாவின் மகள், கட்டியணைத்துக் கொண்டாடர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, அதில், பாபர் அசாம் உஸ்மான் காவாஜா மகளை கைநீட்டி அழைத்ததும், அந்த குழந்தை ஓடிச்சென்று கட்டிக்கொண்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்