அட்லி-அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளர் இவரா?
26 மார்கழி 2023 செவ்வாய் 08:10 | பார்வைகள் : 10002
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில் ஒரு சாதனை செய்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் அட்லி இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் தற்போது ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தை முடித்தவுடன் அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தை இசையமைப்பாளர் குறித்த தகவல் கசிந்து உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லியின் முந்தைய படமான ’ஜவான்’ படத்தின் வெற்றிக்கு அனிருத் ஒரு முக்கிய காரணம் என கூறப்பட்ட நிலையில் அட்லி - அல்லு அர்ஜுன் இணையும் படத்திலும் அனிருத் இசையமைக்க இருப்பதால் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆவது உறுதி என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன.
அட்லி, அல்லு அர்ஜுன் மற்றும் அனிருத் என ட்ரிபிள் ஏ ஒரே படத்தில் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan