Meaux : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் படுகொலை! - தந்தை கைது!!
26 மார்கழி 2023 செவ்வாய் 07:59 | பார்வைகள் : 12212
Meaux நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த குடும்பத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் என மொத்தம் ஐவர் நேற்று திங்கட்கிழமை மாலை வீடொன்றில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபர் ஒருவர் (கொல்லப்பட்ட பிள்ளைகளின் தந்தை) தலைமறைவான நிலையில், அவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seine-Saint-Denis மாவட்டத்தின் Sevran நகரில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.
மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்களை <<இங்கே>> படிக்கலாம்!

























Bons Plans
Annuaire
Scan