Paristamil Navigation Paristamil advert login

யாழில் அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: ஒன்பது மாத குழந்தை பலி

யாழில் அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்: ஒன்பது மாத குழந்தை பலி

25 மார்கழி 2023 திங்கள் 15:31 | பார்வைகள் : 5055


யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதேவேளை கடந்த சனிக்கிழமை யாழ்,பல்கலைக்கழக மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டதன் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து செல்வதனால் யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக இரண்டு நோயாளர் விடுதி திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்