Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் JN-1 திரிபு பரவல் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்!

இலங்கையில் JN-1 திரிபு பரவல் குறித்து சுகாதார பிரிவு வெளியிட்ட தகவல்!

25 மார்கழி 2023 திங்கள் 12:35 | பார்வைகள் : 4547


கொரோனா வைரஸ் தொற்றின் JN-1 திரிபானது இலங்கையில் பரவுவதற்கான சாத்தியம் குறைவாக காணப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்ஃபுளுவென்சா மற்றும் ஏனைய சுவாச நோய்களின் பரவலை பாதுகாப்பு முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மூலம் கட்டுப்படுத்த முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்