நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்!

25 மார்கழி 2023 திங்கள் 10:54 | பார்வைகள் : 5958
தன்னுடன் 10 வருடங்களுக்கு முன் இணைந்து நடித்த நடிகையை அஜர்பைஜானில் சந்தித்த அஜித் அவரிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் நடிப்பில், சரண் இயக்கத்தில் உருவான ’அசல்’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக பாவனா நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித் தற்போது அஜர்பைஜானில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் வேறு வேலையாக அஜர்பைஜான் சென்ற பாவனா அஜித்தை சந்திக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று இருந்தார்.
அப்போது படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்த அஜித் ’நீங்கள் இங்கே வந்திருப்பது முன்கூட்டியே எனக்கு தெரியும், ஆனாலும் உங்களை சந்திக்க லேட்டாகிவிட்டது, மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அப்போது பாவனா, ‘அதெல்லாம் தேவையில்லை, உங்களை சந்தித்ததே பெரிய விஷயம்’ என்று கூறினார். இதையடுத்து இருவரும் உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
பத்து வருடத்திற்கு முன் நடித்த நடிகையாக இருந்தாலும் சில நிமிடங்கள் தாமதம் ஆனதற்கு அஜித் அவரிடம் மன்னிப்பு கேட்டது, அவருடைய மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025