இலங்கையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பு
25 மார்கழி 2023 திங்கள் 09:31 | பார்வைகள் : 6408
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், இரண்டு பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, வவுனியா சிறைச்சாலையில் இருந்து 23 கைதிகளும், யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


























Bons Plans
Annuaire
Scan