பிரான்ஸில் இருந்து இலங்கையர்கள் நாடு கடத்தல்

25 மார்கழி 2023 திங்கள் 08:54 | பார்வைகள் : 6691
பிரான்ஸில் இருந்து இலங்கையர்கள் குழுவொன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக படகுகளில் பயணித்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி சிறப்பு விமானம் மூலம் அவர்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025