இலங்கையில் மனைவியுடனான சண்டையில் வீட்டைக் கொளுத்திய கணவன்

25 மார்கழி 2023 திங்கள் 02:30 | பார்வைகள் : 6165
இலங்கையில் கணவன் - மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் 23 ஆம் திகதி ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, வீடு முழுமையாக தீக்கரையானதுடன் , பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எனினும் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025