Paristamil Navigation Paristamil advert login

நிகரகுவா நாட்டில் கோர விபத்து! 19 பேர் பலி...

நிகரகுவா நாட்டில் கோர விபத்து! 19 பேர் பலி...

25 மார்கழி 2023 திங்கள் 02:13 | பார்வைகள் : 7423


மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் Matagalpa பகுதியில் 70கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனால் ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. 

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 பேர் குழந்தைகள் என்றும், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.   

வர்த்தக‌ விளம்பரங்கள்