Paristamil Navigation Paristamil advert login

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் - 26,000 காவல்துறையினர்!

பணி புறக்கணிப்பில் ஈடுபடும் - 26,000 காவல்துறையினர்!

24 மார்கழி 2023 ஞாயிறு 15:45 | பார்வைகள் : 6623


இன்று டிசம்பர் 24 ஆம் திகதி மாலையில் இருந்து 31 ஆம் திகதி மாலை வரை நகரசபை காவல்துறையினர் (policiers municipaux) பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.

சமூகக் கொடுப்பனவுகளைக் கோரி அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகிறது. inter-union தொழிற்சங்கத்தினைச் சேர்ந்த 26,000 காவல்துறையினர் இந்த ஒரு வாரகாலமும், எந்த ஒரு மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள் எனவும், தீயணைப்பு படையினருக்கு அல்லது, தேசிய காவல்துறையினருக்கு உதவிகளைச் செய்யமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காவல்துறையினருக்கு வழங்குவது போன்று 1,200 யூரோக்களில் இருந்து 1,400 யூரோக்கள் வரை மாத ஓய்வூதியம் வழங்கக்கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்