விற்பனையான மீனில் பக்டீரியா! - பயன்படுத்தவேண்டாம் என அறிவுறுத்தல்!!

24 மார்கழி 2023 ஞாயிறு 15:46 | பார்வைகள் : 9136
புகை மூலம் பதப்படுத்தப்பட்ட சல்மன் மீன் (saumon fumé) வாங்கியவர்களுக்கு, அதனை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SAS Le Fumoir நிறுவனத்தைச் சேர்ந்த 11.173.011 தொகுதி இலக்கமுடைய குறித்த மீனினை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதனை பெற்றுக்கொண்ட நிலையங்களில் மீள கொடுத்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதியில் இருந்து விற்பனையாகும் இந்த மீன், ஜனவரி 1 ஆம் திகதி காலாவதியாகும். ஆனால் குறித்த மீனினால் listeriosis எனும் பக்டீரியா பரவும் எனவும், இதனால் ஒவ்வாமை ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் பயன்படுத்தக்கூடாது எனவும், மீள கொடுத்தோ அல்லது அதன் ரசீதினை காண்பித்தோ பணத்தை மீளப்பெறவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025