Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இலங்கை வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு!

இலங்கை வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு!

24 மார்கழி 2023 ஞாயிறு 12:16 | பார்வைகள் : 15440


தேவாலயங்கள் மற்றும் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களில் இவ்வாறு விடேச பாதுகாப்பு வழங்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மதகுருமார்கள் 0112 47 2757 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலம் போலிஸ் தலைமையகத்தை தொடர்புகொண்டு பாதுகாப்பு உதவிகளை பெற முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் 7500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்