உக்ரைன் நாட்டுக்குள் வந்த ரஷ்ய விமானங்கள் தாக்கிய இராணுவம்
24 மார்கழி 2023 ஞாயிறு 03:58 | பார்வைகள் : 7114
உக்ரைன் தங்கள் நாட்டுக்குள் வந்த 3 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.
Pause Unmute Loaded: 7.95% Remaining Time -9:55 Close Player இது குறித்து அந்த நாட்டு விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொ்சான் பகுதி வான் எல்லையில் ரஷ்யாவின் எஸ்யு-34 ரகத்தைச் சோ்ந்த 3 விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்தத் தகவலை இதுவரை ரஷ்யா உறுதிப்படுத்தவில்லை.
எனினும், ரஷ்யாவின் பாதுகாப்பு வலைதளப் பதிவா் ஒருவா் வெளியிட்டுள்ள பதிவில் உக்ரைனில் சில ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்த விமானத்தில் இருந்தவா்களில் சிலா் உயிருடனும், சிலா் சடலமாகவும் மீட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பேட்ரியாட் ரக வான்பாதுப்பு ஏவுகணைகள் மூலம் அந்த விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan