பிரான்ஸ் பயணிக்க முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

23 மார்கழி 2023 சனி 15:05 | பார்வைகள் : 7084
பிரான்ஸ் பிரஜைக்கு சொந்தமான காணாமல் போன கடவுச்சீட்ழடை பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று மதியம் 12.55 அளவில் லண்டன் நோக்கி செல்லும் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
விமானத்தில் ஏறுவதற்காக விமான சேவையின் கருமபிடத்திற்கு சென்று வழங்கிய கடவுச்சீட்டு தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை குடிவரவு, குடியகல்வு தேச எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது கறித்த கடவுச்சீட்டு சர்வதேச பொலிஸின் காணாமல் போன மற்றும் திருடிய கடவுச்சீட்டு பட்டியலில் உள்ள ஒன்றென தெரிவந்துள்ளது.
சந்தேக நபரிடம் இது குறித்து விசாரித்த போது, தான் நேற்று முல்லைத்தீவில் இருந்து கொழும்பு ஆமர் வீதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு வந்ததாகவும் தன்னிடம் இருந்த இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட இரண்டு தரகர்கள் பிரான்ஸ் கடவுச்சீட்டை தனக்கு வழங்கியதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025