கடும் மழை... இருளில் மூழ்கிய கலிபோர்னியா

23 மார்கழி 2023 சனி 09:44 | பார்வைகள் : 7441
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.
மேலும் கடற்கரை பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.
கனமழையால் சாலைகள் அனைத்து வெள்ளக்காடாக மாறியதால் பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின.
முக்கிய சாலைகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
தொடர்ந்து, மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவை சாய்ந்ததால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இதேபோல தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆக்சினாட், வென்சுரா பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்டன. அங்கிருந்து 100க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அதேவேளை குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் கலிபோர்னியா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025