இஸ்ரோவுக்கு உயரிய விருதை வழங்கிய ஐஸ்லாந்து
23 மார்கழி 2023 சனி 09:41 | பார்வைகள் : 5503
நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள கடந்த (14.07.2023) திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த (23.08.2023) ஆம் திகதி நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. இந்தச் சாதனைக்கு பிறகு உலகின் முன்னணி நாடுகள் இஸ்ரோ உடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளன.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்காக ஐஸ்லாந்தின் ஹூசாவிக் நகர ஆய்வு அருங்காட்சியகம் இஸ்ரோ நிறுவனத்தைக் கௌரவித்துள்ளது.
இஸ்ரோவுக்கு 2023-லீப் எரிக்சன் லூனார் என்ற உயரிய விருதை வழங்கியது.
இதனை இஸ்ரோ சார்பில் ஐஸ்லாந்துக்கான இந்திய தூதுவர் ஷியாம் பெற்றுக்கொண்டார்.
இந்த விருதை வழங்கியதற்காக ஐஸ்லாந்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நன்றி தெரிவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan