Quaker Brand உணவு பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கும் அரபு நாடு

23 மார்கழி 2023 சனி 09:34 | பார்வைகள் : 5940
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Quaker Brand தயாரிப்புகளை தடை செய்யுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 8, மார்ச் 12, ஜூன் 3, ஆகஸ்ட் 2, செப்டம்பர் 1 மற்றும் ஒக்டோபர் 1 ஆகிய திகதிகளில் காலாவதியாகும் குவாக்கர் ஓட்ஸ் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் சால்மோனெல்லா (Salmonella) என்ற பாக்டீரியா (pathogenic bacteria) இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக US Food and Drug Administration (FDA) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து இந்த தயாரிப்புகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கத்தார் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.