ஆய்வகத்தில் உயிரை உருவாக்கும் காலம் தூரத்தில் இல்லை: நோபல் பரிசு வென்ற சுவிஸ் ஆய்வாளர்
23 மார்கழி 2023 சனி 08:49 | பார்வைகள் : 5707
ஆய்வகத்தில் உயிரை உருவாக்கும் காலம் தூரத்தில் இல்லை என்று கூறியுள்ளார், நோபல் பரிசு வென்ற சுவிஸ் ஆய்வாளர் ஒருவர்.
கடந்த நூற்றாண்டில் அணு ஆயுதங்களின் கண்டுபிடிப்பு காரணமாக நம்மிடம் அழிக்கும் ஆற்றல் இருந்தது. அதற்கு மாறாக, ஆய்வகத்தில் செயற்கையாக உயிரை உருவாக்குவதன் மூலம், இந்த நூற்றாண்டில், உருவாக்கும் திறனைப் பெறப்போகிறோம் என்கிறார், நோபல் பரிசு பெற்ற சுவிஸ் அறிவியலாளரான Didier Queloz (57).
உயிர் உருவாதல் என்பது ஒரு வேதியல் செயல்முறை என்று கூறும் Didier Queloz, சூழ்நிலைகள் சரியாக இருந்தால், உயிர் உருவாகும் என்கிறார்.
2021ஆம் ஆண்டு முதல், உயிரின் தோற்றம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளும் மையம் ஒன்றை சூரிச்சிலுள்ள சுவிஸ் பெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைத்து வருகிறார் Didier Queloz.
உயிர் உருவாதல் என்பது, சூரியக் குடும்பம், சூரியக்குடும்பத்துக்கு வெளியே உள்ள புறக்கோள்கள் குறித்த ஆய்வு மற்றும் ஆய்வகப் பரிசோதனைகள் மூலம் உயிர் உருவாதலை முயற்சித்தல் ஆகிய விடயங்கள் அடங்கியதாகும் என்கிறார் அவர்.
தன்னைப் பொருத்தவரை, இந்த நூற்றாண்டின் இறுதிவாக்கில் ஆய்வகங்கள் உயிரை உருவாக்கிவிடக்கூடும் என்கிறார் Didier Queloz.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan