பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை! - ஐவர் கைது!!

23 மார்கழி 2023 சனி 07:00 | பார்வைகள் : 9991
Meurthe-et-Moselle மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மிகப்பெரிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஒன்றில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு (policiers de la sous-direction antiterroriste (SDAT) மற்றும் தேசிய உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு (Direction générale de la Sécurité intérieure (DGSI)) ஆகிய இரு வீரர்களும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். Nancy, Toul மற்றும் Vandœuvre-lès-Nancy ஆகிய சிறு நகரங்களில் குறித்த வீரர்கள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நாடு முழுவதும் அதி தீவிர கண்காணிப்பை பின்பற்றுமாறு உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளதை அடுத்தே மேற்படி ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது Levallois-Perret நகரில் உள்ள DGSI அதிகாரிகளின் நிலையத்தில் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025