இஸ்ரேல் ஹமாஸ்க்கிடையிலான போரின் தீவிரம்! உணவின்றி தவிக்கும் காசா மக்கள்...!
23 மார்கழி 2023 சனி 04:06 | பார்வைகள் : 6894
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை அழிக்கும் வரை போர் நிறுத்த மாட்டோம் என கூறி வருகின்றது.
இதேவேளையில் இஸ்ரேல் - ஹமாஸ் போர் இரு மாதங்களை கடத்தும் முடிவிற்கு வராத நிலையில் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருகின்றது.
இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

























Bons Plans
Annuaire
Scan