Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

இளம் வயதினரை அச்சுறுத்தும் புற்றுநோய் .... சுவிஸ் மருத்துவர் தகவல்

இளம் வயதினரை அச்சுறுத்தும் புற்றுநோய் .... சுவிஸ் மருத்துவர் தகவல்

22 மார்கழி 2023 வெள்ளி 08:50 | பார்வைகள் : 8955


50 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கிடையே புற்றுநோயானது அதிகரித்துள்ளது என  சுவிஸ் மருத்துவத்துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புற்றுநோய் அதிகரித்துவருகிறது.

அதிகமாகிவரும் வயதானவர்கள் எண்ணிக்கை அதற்குக் காரணம் என்று கூறும் லாசேன் பல்கலை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவத்துறை நிபுணரான Solange Peters, ஆனால், பொதுவாக 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்குவது அபூர்வம் என்கிறார்.

அந்த நிலை இப்போது மாறிவருகிறது என்று கூறும் Solange Peters, வயதானவர்களை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவுதான், என்றாலும், பொதுவாக 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்கிறார்.

இது எச்சரிக்கைக்கான ஒரு அறிகுறி என்று கூறும் Solange Peters, அதுவும், குறிப்பாக மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கல்லீரல், புராஸ்ட்ரேட், சிறுநீரகம் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை அதிகரித்துவருவது கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்கிறார்.

செயற்கை இனிப்பூட்டிகள் மற்றும் உணவுப்பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றுடன் சேர்க்கப்படும் ரசாயனங்கள், ஆகிய விடயங்கள் அபாயக் காரணிகளாக இருக்கலாம்.

கூடவே, உடல் பருமன், அதிகம் ஓடியாடி வேலை செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தல், புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவையும் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகளாக அமைகின்றன என்கிறார் Solange Peters.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை புற்றுநோயைத் தடுப்பதற்கான அடிப்படை விடயமாகும் என்று Solange Peters, தெரிவித்துள்ளதுடன்.

மரபியல் மற்றும் தொற்று ஆகிய காரணங்களையும் மறுப்பதற்கில்லை என்கிறார். 

ஆரம்ப கட்டத்திலேயே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல் விரைவான சிகிச்சைக்கு உதவக்கூடும் என்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்