14 பேரை சுட்டுக்கொன்ற பல்கலைக்கழக மாணவர்! பயங்கர சம்பவம்

22 மார்கழி 2023 வெள்ளி 08:42 | பார்வைகள் : 9130
செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் ஒருவர் தனது தந்தை உயிரிழந்த மறுநாள், 14 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கொடூரத்தை நிகழ்த்திய தாக்குதல்தாரியான மாணவரும் உயிரிழந்துள்ளார்.
அவர் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று செக் காவல்துறை தலைவர் Martin Vondrasek செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், குறித்த மாணவர் துப்பாக்கி உரிமம் மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 'செக் குடியரசின் வரலாற்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் மிகவும் சோகமான சம்பவம்' என செக் குடியரசு ஜனாதிபதி Petr Pavel கூறியுள்ளார்.
மேலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025