Paristamil Navigation Paristamil advert login

காசா மக்களுக்கு தற்காலிக விசா அறிவித்த பிரபல நாடு

காசா மக்களுக்கு தற்காலிக விசா அறிவித்த பிரபல நாடு

22 மார்கழி 2023 வெள்ளி 08:05 | பார்வைகள் : 5232


இஸ்ரேல் - ஹமாஸ் போர் அதிதீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

கனடா நாட்டினரின் உறவினர்கள் காசா பகுதியில் இருந்து, எங்கள் நாட்டில் குடியேற தற்காலிக விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கனடா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காசாவில் இருந்து வெளியேற நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது எனவும் கனடா தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 2024 ஜனவரி 9 2ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்பதாக  குடிவரவு மந்திரி மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 660 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், நிரந்தமாக வசித்து வருபவர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகளை காசாவில் இருந்து அழைத்து வர கனடா அரசங்கம் கவனம் செலுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுடைய பெற்றோர்கள், குழந்தைகள், பேரக்குழந்கைள் போன்றோரின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அவர்களுடைய விண்ணப்பங்கள் ஏற்புடையதாக இருந்தால் மூன்று வருடங்கள் விசா வழங்கப்படும். இதனால் எத்தனை பேர் கனடாவிற்கு வருவார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்