Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis : துணை முதல்வர் மீது தாக்குதல்!

Saint-Denis : துணை முதல்வர் மீது தாக்குதல்!

21 மார்கழி 2023 வியாழன் 15:31 | பார்வைகள் : 5729


Saint-Denis (Seine-Saint-Denis) நகர துனை முதல்வர் Mathieu Hanotin மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் வீதி ஒன்றில் வைத்து பல்வேறு நபர்களால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். சோசலிய கட்சியைச் சேர்ந்த குறித்த பெண் துணை முதல்வர், கட்சி சார்ந்த சந்திப்பு ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், அவரை சில நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அவரை உதைந்து விழுத்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குரிய காரணங்கள் குறித்து எதுவும் அறிய முடியவில்லை.

இத்தாக்குதல் தொடர்பில் சோசலிச கட்சி தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், வழக்கும் பதிவு செய்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்