பிரான்ஸ்-இங்கிலாந்து - மறு அறிவித்தல் வரை தொடருந்து போக்குவரத்து தடை!

21 மார்கழி 2023 வியாழன் 14:34 | பார்வைகள் : 13871
பிரான்சில் இருந்து இங்கிலாந்துக்குச் செல்லும் சுரங்கப்பாதை (Tunnel sous la Manche) மூடப்பட்டுள்ளதால் மறு அறிவித்தல் வரை அனைத்து தொடருந்து சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. Eurostar தொடருந்து சேவைகள், மற்றும் மகிழுந்துகள் மற்றும் கனரக வாகனங்களை ஏற்றிச் செல்லும் தொடருந்துகளும் இயக்கப்பட மாட்டாது என அறிய முடிகிறது.
இரு நாட்டு தொழிற்சங்க ஊழியர்களும் பணியாற்றும் குறித்த சுரங்கத்தில், பிரெஞ்சு தரப்பு ஊழியர்களே பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 யூரோக்கள் கொடுப்பனவை நிராகத்த ஊழியர்கள், அதனை மூன்று மடங்காக கோரி இந்த பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
மறு அறிவித்தல் வரை போக்குவரத்து தடைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025