சட்டம் அனைவருக்குமானது - குடிவரவு சட்டத்தினை ஏற்க மறுக்கும் நகரமுதல்வர்களுக்கு பொருளாதார அமைச்சர் பதில்!!

21 மார்கழி 2023 வியாழன் 10:07 | பார்வைகள் : 7901
இரு நாட்களுக்கு முன்னர் பிரான்சில் நிறைவேற்றப்பட்ட புதிய குடிவரவு சட்டத்தின் சில நிபந்தனைகளை ஏற்க மறுப்பதாக சில மாவட்ட நகரபிதாக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
APA எனப்படும் l'allocation personnalisée d'autonomie கொடுப்பனவுகள் விதிகளை மீறிச் செயற்படும் நபர்களுக்கு நிறுத்துவதற்கு இந்த புதிய வரைவு அனுமதிக்கிறது. இதனை 32 வரையான நகரங்களைச் சேர்ந்த நகரபிதாக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, Var, Seine-Saint-Denis, Lot உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நகரபிதாக்களே இந்த சட்டத்தினை ஏற்க மறுத்துள்ளனர். இந்நிலையில், இந்த சட்டம் அனைவருக்கும் பொருந்தக்கூடியது என பிரான்சின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire இன்று வியாழக்கிழமை காலை தெரிவித்தார்.
”பிரெஞ்சு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரையும் இந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது!” என அவர் தெரிவித்தார்.