நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து....

21 மார்கழி 2023 வியாழன் 02:39 | பார்வைகள் : 8299
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
நியூயார்க் மாகாணத்தில் உள்ள Queensயின் Sunnyside பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் மேல் தளத்தில் புதன்கிழமை மதியம் தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க போராடினர்.
உள்ளே சிக்கியிருந்த பலர் பத்திரமாக வெளியேறியதாக கூறப்பட்டது. முதலில் பதிலளித்தவர்கள் மொத்தம் 14 பேர் காயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக எவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.
ஆனால் ஒரு தீயணைப்பு வீரர் தீவிரமான காயங்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் 40 முதல் 50 குடியிருப்பாளர்கள் தீ மற்றும் தண்ணீர் சேதத்தால் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜோர்ஜ் ரூயிஸின் (Jorge Ruiz) இதுகுறித்து கூறுகையில்,
'இந்த நேரத்தில் நான் என்ன நினைப்பது என்று கூட தெரியவில்லை. நான் ஒருவித அதிர்ச்சியில் இருக்கிறேன்.
என்ன நினைப்பது என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று எனக்கு தெரியும்.
அவ்வளவு தான் எனக்கு தெரியும்' என தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025