ஒலிம்பிக் 2024 : விளையாட்டு மைதாங்களுக்கு அருகே அமைக்கப்பட உள்ள Vélib' தரிப்பிடங்கள்!
20 மார்கழி 2023 புதன் 18:00 | பார்வைகள் : 15551
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் மைதானங்களைச் சுற்றி Vélib' வாடகை மிதிவண்டி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்துககக பரிஸ் நகரசபை 400,000 யூரோக்களை வழங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளினை இலக்கு வைத்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் வீதி போக்குவரத்து மாற்றங்கள் முதன்மையானதாகவும். அத்தோடு Vélib' வாடகை மிதிவண்டிகளுக்கான தரிப்பிடங்கள் மைதானங்களுக்கு அருகிலேயே கிடைக்கூடிய விதமான நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசில் வடக்கு பகுதியிலும், Saint-Denis நகரிலும், Choisy-le-Roi, நகரிலும் என மொத்தம் 62 நகராட்சிகளில் 1,470 தரிப்பிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் நாட்களில் வீதி போக்குவரத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. பாதசாரிகளுக்கும், மிதிவண்டி சாரதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதையடுத்தே மேற்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


























Bons Plans
Annuaire
Scan