Paristamil Navigation Paristamil advert login

காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்...

காசாவில் மீண்டும் போர் நிறுத்தம்...

20 மார்கழி 2023 புதன் 10:04 | பார்வைகள் : 8576


இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. 

இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே எகிப்துக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்