ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் வெடித்து சிதறிய எரிமலை

20 மார்கழி 2023 புதன் 09:50 | பார்வைகள் : 7310
ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.
கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை திங்கட்கிழமை (18) இரவு முதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் எரிமலையானது தீப்பிழம்பை கக்கி வருகிறது.
கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில்திங்கட்கிழமை வெடித்து சிதறியுள்ளது.
எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் எரிமலை வெடிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிமலை வெடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025